கோவை சூலூர் ஹார்டுவேர் கடையில் கொள்ளயடிக்கப்பட்ட ரூ.4.28 லட்சம் பணம் மீட்பு.வாலிபர் கைது !!!
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஹார்டுவேர் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையின் மேல் தளத்தை உடைத்து உள்ளே இறங்கி ரூ.4.28 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.இந்த கொள்ளை குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைத்தும் கொள்ளையனை தேடி வந்த நிலையில் சூலூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் சாலையில் சுற்றித்திரிந்த ஒருவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த காசி என்பதும்,அனாதை இல்லத்தில் படித்து வந்ததாகவும்,அங்கிருந்து வெளியே வந்து பல்வேறு இடங்களில் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும்,சூலூர் ஹார்டுவேர் கடையில் கொள்ளையில் ஈடுபட்டு விட்டு தப்பி செல்ல முயன்ற போது வசமாக சிக்கிக்கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து ரூ.4.28 லட்சம் பணத்தையும் மீட்டனர்.இவன் மீது சென்னை,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






