--- --:--:-- --

பொறியில் சிக்கி சிறுத்தை பலியானது அம்பலம்! குற்றச்செயலில் ஈடுபட்டோரை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு !!!

11.1

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்ததுள்ள மோத்தேபாளையம் சென்னாமலை கரடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலை முள்கம்பி வேலியில் 2 வயதுள்ள சிறுத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு சிக்கி படுகாயமடைந்தது.படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுத்தையை மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் உள்ள அரசு மரக்கிடங்கு குரங்குகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தது.

 

இன்று மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறாய்வு நடத்தப்பட்டு எரியூட்டப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.பலியான சிறுத்தையை பார்வையிட வந்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது,அவர் காட்டுப்பன்றி,முயல்களை வேட்டையாடுவதற்காக வைத்த பொறியில் சிக்கி சிறுத்தை பலியானதாகவும்,சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,இதுபோன்று பொறியில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுத்தையை மீட்கப்பட்ட நிலையில் பலியான சிறுத்தைக்கு தண்டுவட நரம்புகள் அறுந்து விட்டதாகவும்,அதனால் தான் சிறுத்தை உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும்,கோவை மாவட்டத்தில் மதுக்கரை முதல் சிறுமுகை வரை வன விலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பேட்டியின் போது சிறுமுகை வனச்சரகர் செந்தில் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon