--- --:--:-- --

லடாக் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி சோகத்தில் மூழ்கிய கிராமம் !

லடாக் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி  சோகத்தில் மூழ்கிய கிராமம் !

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (40). இவர் கடந்த 1999ல் ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள லே பகுதியில் ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று லடாக்கில் சீன இந்திய எல்லைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.இதில் தமிழகத்தைச் சேர்ந்த இவரும் பலியானார். இவருக்கு வானதி தேவி என்ற மனைவியும் பிரசன்னா, திவ்யா ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். இவரது உடல் நாளை சொந்த கிராமமான கடுக்களூரில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இவரது உடன்பிறந்த சகோதரரான இதயக்கனி ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon