--- --:--:-- --

கொரொனா அச்சத்தால் சொந்த ஊர் செல்ல முயற்சிக்கும் சென்னை மக்கள்!

6.1

வந்தாரை வாழவைக்கும் சென்னை, வந்தாருக்கு அச்சத்தை விளைவித்துக் கொண்டு உள்ளது. வேலை இல்லை, வருமானமும் இல்லை நான்கு மாத வாடகை பாக்கி உள்ள சிக்கல்களுக்கு மத்தியில் அதி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனால் வீட்டை காலி செய்து கொண்டு சொந்த மாவட்டங்களை நோக்கி பலரும் புறப்படும் காட்சிகளை செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பார்க்க முடிகிறது. மதுரவாயில் மட்டும் முப்பதுக்கும் அதிகமான குடும்பங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

சென்னையிலிருந்து செல்வோரில் இ – பாஸ் இல்லாதவர்களை வெளி மாவட்டங்களில் அனுமதிப்பதில்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோரும் இ பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

இதனால் வெளி மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்களுக்கும் சிக்கல் நிலவுகிறது. பெரு வெள்ளம், சுனாமி, வர்தா என பல பேரிடர்களை சந்தித்தாலும் அவற்றிலிருந்து மீண்டு வந்த சென்னை இப்போது கொரொனா சூழலில் சிக்கி மீள முடியாமல் தத்தளிக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon