--- --:--:-- --

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

2

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

 

கேரளா, கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத் தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் சுட்டெரித்தது.

 

அதிகபட்சமாக திருத்தணியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை, மதுரை, கடலூர், தூத்துக்குடி, வேலூர், திருச்சி, நாகை ஆகிய 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்தது.

Leave a Reply

Right Menu Icon