இ-பாஸ் இன்றி சொந்த ஊர் செல்ல முயற்சி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு!
சென்னையிலிருந்து இ பாஸ் இல்லாமல் சொந்த ஊர் செல்ல முயன்றதாக அந்த மூன்று நாட்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வழக்குகளை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கொரொனா காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். செங்கல்பட்டு நோக்கி வரும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யும் காவலர்கள் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களில் மட்டும் இருநூற்றுக்கும் அதிகமான வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.







