கொரோனா சிகிச்சைக்கு புதிய நெறிமுறைகள்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் கொரொனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என்றும் தொற்று முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கொரோனா தீவிரமாக பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளை அசித்ரோமைசின் மாத்திரைகளுடன் சேர்த்து தரலாம் என்று கூறியிருந்த நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டெசிவரை பரிந்துரை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.







