ஒரு நிமிடத்தில் 65 கிவி பழங்களை வெட்டிய இளைஞர்!
அமெரிக்காவின் இலாகா மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தியால் 65 கிவி பழங்களை ஒரு நிமிடத்தில் சரமாரியாக வெட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். டேவிட் ரஸ் என்ற இளைஞர் தனது கையில் நீண்ட கத்தியை தயாராக வைத்திருக்க அவரது நண்பர் ஒருவர் எதிரில் என்றவாறு கிவி பழங்களை அவரை நோக்கி எறிந்தார்.
உடனடியாக அந்த பழங்களை கத்தியால் சரமாரியாக வெட்டித் தள்ளினார். இவ்வாறு ஒரு நிமிடத்தில் 65 பழங்களை வெட்டி தள்ளி கின்னஸ் சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 35 பழங்களை கத்தியால் வெட்டி இருந்த நிலையில் தன்னுடைய முந்தைய சாதனையை முறியடித்திருக்கிறார்.






