லோனார் ஏரி ஒரே நாளில் சிவப்பாக மாறியதால் மக்கள் வியப்பு!
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி ஒரே நாளில் செந்நிறமாக மாறியுள்ளது உள்ளூர் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 50,000 ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தால் லோனார் ஏரி உருவானதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு பரப்பில் உள்ள இந்த ஏரியில் நீர் உவர் நீராக உள்ளது இதன் தனிச் சிறப்பாகும். வறட்சியால் ஒரு கிலோ மீட்டர் விட்டத்திற்கு சுருங்கிப்போய் உள்ள லோனார் ஏரியின் நீர்ப்பரப்பு திடீரென ஒருநாள் செந்நிறமாக மாறியது உள்ளூர் மக்கள், இயற்கை ஆர்வலர்கள், பூமி அறிவியலாளர்கள் ஆகியோரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
லோனார் ஏரி நிறம் மாறுவது ஒன்றும் புதிது அல்ல என்றும் இம்முறை மிக அதிக அளவில் நிறம் மாறியுள்ளதாகவும் அதை தொடர்ந்து உற்றுநோக்கி வருபவர்கள் தெரிவித்துள்ளனர். நீரின் அளவு குறைந்து உவர்த்தன்மை அதிகரித்ததாலும் நீரில் உள்ள ஆல்கஹாலும் நிறம் மாறியிருக்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.






