--- --:--:-- --

சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை வெளியீடு! சென்னை ஐஐடி முதலிடம்!

8

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. ஆண்டுதோறும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிறந்த கல்வி நிறுவனங்கள், சிறந்த பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றின் தரவரிசைப் பட்டியலை வெளியிடும்.

 

அந்த வகையில் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஐஐஎஸ்சி பெங்களூர் இரண்டாம் இடத்தையும், ஐ‌ஐ‌டி டெல்லி 3-ஆம் இடத்தையும் பிடித்து இருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகம் இந்த பட்டியலில் 20 ஆம் இடத்தில் இருக்கிறது.

 

சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடத்தில் இருக்கிறது. டெல்லி ஐஐடி இரண்டாம் இடத்திலும், மும்பை ஐஐடி மூன்றாம் இடத்திலும் உள்ளன. சிறந்த பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசையில் ஐஐஎஸ்சி பெங்களூரு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்திலும், உத்திரப்பிரதேசத்தின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் 12வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 22வது இடத்தையும் பிடித்துள்ளன. மேலாண்மை கல்வி வழங்கும் நிறுவனங்களில் ஐ‌எம்‌எம் அகமதாபாத் முதலிடத்தில் உள்ளது.

 

ஐ‌எம்‌எம் பெங்களூர் இரண்டாம் இடத்திலும்,ஐ‌எம்‌எம் கொல்கத்தா மூன்றாம் இடத்திலும் உள்ளன. சிறந்த மருத்துவ கல்வி நிறுவனமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தேர்வாகியுள்ளது. இந்த பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 12வது இடத்தை பிடித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon