சார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளும் மாஸ்கை கண்டுபிடித்துள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் !
வென்டிலேட்டர் தொழில்நுட்பத்துடன் சார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பிரத்யேக முக கவசத்தை வடிவமைத்திருக்கிறார்கள். கொரொனாவில் இருந்து தன்னை காத்துக் கொள்ள பணியிடங்களிலும் வெளியில் உலாவும் போதும் நீண்ட நேரம் முக கவசம் அணிவதில் சில சிரமங்களை சந்தித்து வருவதாக கூறுகின்றனர் மக்கள்.
அவற்றைக் களையும் வகையில் நானோ தொழில்நுட்பம் மூலம் அதிநவீன செயற்கை சுவாசமும் கவசத்தை வடிவமைத்து வியக்க வைத்துள்ளனர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள். என் 95 முகக் கவசங்கள் 95 சதவீத நுண்துகள்கள் பிரித்தெடுக்கப்படும் நிலையில் இந்த முக கவசத்தில் 99% நுண் துகள்கள் நுண்ணுயிரிகள் தடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
அரசின் ஒப்புதலுக்கான உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உபயோகத்திற்கு சிறந்த முறையில் விரைவில் கொண்டுவரப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன்.
கற்பிப்பதோடு விட்டுவிடாமல் பேரிடர் காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப மருத்துவ உபகரணங்களை கண்டு பிடிக்கும் முயற்சியை அரசு ஊக்குவிப்பதுடன் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே இவர்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






