ஜூன்-15 முதல் மீண்டும் ஊரடங்கா? மத்திய அரசு அளித்துள்ள விளக்கம்!
ஜூன் 15 முதல் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றின் அடையாளம் கொண்டு பகிரப்பட்ட புகைப்படத்தில் ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு நாடு முழுவதும் முழு அளவில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் அதில் உள்ள செய்தியை போலி என தெரிவித்துள்ளார் பத்திரிகை தகவல் அலுவலகம் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.






