மருத்துவமனையில் நோயாளி வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம்?
மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தலைமறைவாக உள்ள இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக உள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை சிகிச்சையில் இருந்த மதுரை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த கொலையில் முருகனுக்கு தொடர்பு இருந்ததால் அவரை பழி தீர்க்கும் நோக்கத்தோடு இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.
இதில் தொடர்புடையதாக ஆலயம் பகுதியை சேர்ந்த அருண் பாண்டி, விக்கி, ராமச்சந்திரன், சல்மான்கான் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகிறார்கள்.
அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அரங்கேறிய இந்த கொலை வழக்கு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலை நடந்த அன்று மருத்துவமனை வளாகத்தில் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் உட்பட மூன்று பேரை பணி இடைநீக்கம் செய்து இருக்கிறார்கள்.






