--- --:--:-- --

குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கப்படும்!

4.1

குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முக கவசங்களை கொள்முதல் செய்ய குழு அமைத்து அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

அரசு வெளியிட்ட ஆணையில் தமிழகத்தில் 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 குடும்ப அட்டைகள் இருப்பதாகவும், 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 உறுப்பினர்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் வீதம் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 முகக் கவசங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் துணியால் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை கொள்முதல் செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த குழுவின் பரிந்துரைப்படி முககவசம் கொள்முதலுக்கான டெண்டர் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon