--- --:--:-- --

கொரானாவிற்கான சிறப்பு வார்டு துவக்க நிகழ்ச்சியில் சமூக இடைவெளி பின்பற்றாத அமைச்சர்!

11.2

சிவகங்கை நகரில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனை, தனிமைப்படுத்தப்பட்ட கொரானா சிகிச்சைப் பிரிவு மாற்றி அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. 57 படுக்கையில் கொண்ட சிறப்பு வார்டனை கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.

 

அப்போது மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அதிகாரிகள், மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் என அனைவரும் சமூக இடைவெளி இன்றி கூடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொரானா தனிப்பிரிவு துவக்க விழாவில், கொரானா நோய் தொற்றால் பாதிக்காமல் இருப்பதற்காக அரசு அறிவித்த வழிமுறையை பின்பற்றாமல் அமைச்சர், ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் நடந்து கொண்டது இது அரசு வழிமுறைகள் பொது மக்களுக்கு மட்டும்தானா? அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு கிடையாதா! என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon