17வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சி செய்த கட்டிட தொழிலாளி!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய முயன்ற கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். நாமக்கல் மாவட்டம் குப்பாண்டபாளையம் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவன் கட்டிட வேலை செய்து வருகிறான்.
தன்னோடு வேலை செய்ய வரும் ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சுபாஷ் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






