--- --:--:-- --

அசாமில் எண்ணெய் வயலில் பயங்கர தீ! 2 தீயணைப்பு படை வீரர்கள் பலி!

9

அசாமில் எண்ணெய் வயலில் ஏற்பட்டுள்ள தீயில் சிக்கி 2 தீயணைப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். அசாம் மாநிலம் தின்சுயாகி மாவட்ட பகுதியில் ஹாஞ்சாங் என்ற இடத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது.

 

15 நாட்களுக்கு முன் கிணற்றில் வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த எண்ணெய் வயல் நிபுணர்கள் எண்ணெய் வயலை பார்வையிட்டு கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

 

இதையடுத்து அந்த பகுதியை சுற்றி இருந்த 1500 குடும்பங்கள்வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 2 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது.

 

இதனிடைய தீயை கட்டுப்படுத்த 28 நாட்கள் வரை தேவைப்படும் என வல்லுனர்கள் கூறியதாக தெரிவித்துள்ள அசாம் முதலமைச்சர் தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்ததாக தெரிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon