--- --:--:-- --

கொரொனாவால் உயிரிழந்த அன்பழகனின் உடல் கண்ணம்மா பேட்டையில் நல்லடக்கம்!

8

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருடைய உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினரான அன்பழகன் கொரொனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் இரண்டாம் தேதி அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் மூலமாக ஆக்சிஜன் அளிக்கப்பட்ட நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசம் அடைந்தது.

 

இந்த நிலையில் உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் ஜெ அன்பழகன் இன்று காலை 8.05 மணியளவில் உயிரிழந்தார். மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டு அன்பழகனின் குடும்பத்தினரின் அஞ்சலிக்காக சிறிது நேரம் தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டின் முன் வைக்கப்பட்டது.

 

பின்னர் கண்ணம்மா பேட்டையில் உள்ள மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது தந்தை ஜெயராமனின் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்பழகனின் உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், டி ஆர் பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அன்பழகனின் 62-வது பிறந்த நாள் அவரது மறைவு நாளாகவும் மாறியது திமுகவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon