--- --:--:-- --

நடத்தையில் சந்தேகம் கொண்டு காதல் மனைவியை கொலை செய்த கணவன்!

11

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் அம்பி புதூர் கிராமத்தில் மூன்று ஆண்டுகளாக விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் மனைவியை நடத்தையில் சந்தேகம் கொண்டு கடப்பாரையால் அடித்து கொன்றவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

அவ்வூரில் கட்டட வேலை செய்து வரும் ஹரிகிருஷ்ணன் என்ற இளைஞர் தனது வீட்டுக்கு அருகிலிருந்த தேவி என்ற அந்த இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் தனிமையை கழித்து வந்துள்ளான். பிறகு தேவி அடிக்கடி வேறு யாருடனோ செல்போனில் பேசுவதாக கூறி சந்தேகம் கொண்டு அவரை திருமணம் செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது.

 

தேவி போலீசில் புகார் அளிக்க அங்கேயே இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் நாள்தோறும் குடித்து விட்டு வந்து ஹரிகிருஷ்ணன் தேவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு போதையில் தேவியின் தலையில் கடப்பாரையால் அடித்துக்கொண்டு ஹரிகிருஷ்ணன் தாமே காவல் நிலையம் சென்று விவரங்களை கூறியுள்ளான். விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon