பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – இது காலம் கடந்த முடிவு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்பதே தமிழக அரசு மிகவும் காலம் கடந்து எடுத்த முடிவு என கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என முடிவை முன்கூட்டியே எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என யாரும் குழப்பம் அடையாமல் தெளிவாக இருந்திருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும் அதை விடுத்து நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும் விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். காலம் கடந்து எடுக்கப்பட்ட இந்த முடிவை உரிய நேரத்தில் அறிவித்திருந்தால் தேமுதிக அதனை வரவேற்று இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






