--- --:--:-- --

காணொலி மூலம் நடக்கப்போகிறதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

7.1

தனிமனித இடைவெளியை பின்பற்றிய அனைத்து எம்‌பிகளையும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வைக்க முடியாது என்பதால் வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை காணொளி மூலம் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கொரொனா பரவல் முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்ற அவைகளில் ஒரு மீட்டர் இடைவெளியில் எம்பிக்களை அமர வைக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில் அது சாத்தியமில்லை என்பது தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.

 

எனவே மழைக்காலக் கூட்டத் தொடரை காணொளி மூலம் நடத்தலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அவைக்கு வருகை தருவர், மற்ற எம்பிக்கள் காணொளி மூலம் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பர் என தெரிகிறது.

 

இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரிடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது தனிமனித இடைவெளியை பின்பற்றி 60 உறுப்பினர்களை மாநிலங்களவையிலும் நூறு உறுப்பினர்களை மக்களவையிலும் அமர வைக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon