--- --:--:-- --

கொரோனா எனும் அடி, சாதாரண அடி அல்ல!

11

குடும்பத்தினரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை காப்பது தான் அடிப்படைக் கடமை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கோரொனா காலத்தில் உதவிகள் செய்து கொண்டிருக்கும் மன்ற நிர்வாகிகளின் சேவைகளை பாராட்டி அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரொனா என்னும் அடி சாதாரண அடி அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

 

வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசு தனமான அசுர அடி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவாசத்தை அணியாமலும், இருக்காதீர்கள் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

ஆரோக்கியம் போனால் வாழ்க்கையை போய்விடும் என்று நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon