--- --:--:-- --

புதுச்சேரியில் 10,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து!

9.1

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

 

தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருவதால் புதுச்சேரி மாநிலத்திலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தை பின்பற்றியே மதிப்பெண்கள் வழங்கப்பட இருப்பதாகவும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து புதுச்சேரி அரசு செயல்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களுடனும் ஆலோசித்து இதுகுறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பப்படும் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon