--- --:--:-- --

முகக்கவசம் அணியாமல் மருந்து கம்பெனியை பார்வையிட்ட டிரம்ப்!

12

கொரொனா பரவலைத் தடுக்க அமெரிக்க மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அதிபர் டிரம்ப் முக கவசம் அணியாமல் மருந்து கம்பெனியை பார்வையிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

 

மெயின் பகுதியில் அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம் செய்து கில்போர்டில் உள்ள கொரொனா பரிசோதனை, பஞ்சு, உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பியூரிட்டன் மருந்து கம்பெனிக்கு சென்று பார்வையிட்டார்.

 

அப்போது முகக்கவசமோ, கையுறையோ அவர் அணியவில்லை. இதேபோல் மருந்து கம்பெனியில் இருந்தோரிடமும் அவர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சகஜமாக உரையாடினார். இந்த வீடியோ காட்சி வெளியாகி டிரம்ப்புக்கு எதிராக விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon