--- --:--:-- --

இடுப்புக்குக் கீழ் செயலிழந்த இளம்பெண்! உதவி செய்ய கோரிக்கை!

9

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பே இடுப்புக்கு கீழ் செயலிழந்து படுக்கையில் உள்ள இளம்பெண் உயர்தர சிகிச்சைக்காக முதலமைச்சர் உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தற்போது 29 வயதாகும் இளம்பெண் சூர்யா 14 ஆண்டுகளுக்கு முன் தந்தையை இழந்த நிலையில் குடும்பத்தை காப்பாற்ற போராடிய தாய்க்கு உதவியாக தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றதாகக் கூறுகிறார். ஒரு நாள் வேலைக்கு சென்று திரும்பும்போது அதிவேகமாக வந்த ஆட்டோ மோதி தூக்கி வீசப்பட்ட அவர் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி சுயநினைவை இழந்தார்.

 

பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலன் இல்லாத நிலையிலும் சிகிச்சைக்கு போதிய பண வசதி இல்லாததாலும் 14 ஆண்டுகளாக வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருக்கும் சூர்யா ஊரடங்கால் உணவு இன்றி தவிப்பதாகவும் கூறுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon