--- --:--:-- --

சந்தையில் காய்கறிகளை நசுக்கிய காவல்துறை வாகனம்! காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் சஸ்பெண்ட் !

8

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்யில் காய்கறி சந்தையில் அதிவேகத்தில் வந்த காவல் வாகனம் காய்கறிகள் மற்றும் பழங்களை நாசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. சைரனை ஒலிக்க விட்டபடி வந்த காவல் வாகனம் சந்தைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை நசுக்கும் வீடியோ வெளியானது.

 

வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடுவது மனக்காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சந்தையில் தனி நபர் இடைவெளியை கடை பிடிக்க போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வந்த நிலையில் மக்கள் அதற்கு சரிவர நடந்து கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon