அமெரிக்காவை போல் ராஜஸ்தானில் நடந்த சம்பவம்! இளைஞரை காவலர் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தும் காட்சி!
அமெரிக்காவில் கருப்பினத்தவரை முழங்காலால் நசுக்கி காவல் அதிகாரி ஒருவர் கொன்ற பயங்கரத்தின் சுவடுகள் மறையாத நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்து இருப்பது அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ராஜஸ்தானின் ஜோத்பூரில் முகக்கவசம் அணிய காரணத்துக்காக இளைஞர் ஒருவரைக் கீழே தள்ளி கழுத்தில் காவலர் ஒருவர் முழங்கால் அழுத்தும் காட்சி வெளியாகியுள்ளது.
முகேஷ் குமார் என்ற இளைஞர் முக கவசம் அணியாமல் நடந்து சென்ற போது இரண்டு காவலர்கள் அவரை தடுத்தனர். வாக்குவாதம் ஏற்பட்டதில் முகேசை தாக்கி கீழே தள்ளிய காவலர்களில் ஒருவர் இளைஞரின் கழுத்தில் முழங்கால் மூட்டில் சில வினாடிகள் அழுத்தத்துடன் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.
நல்லவேளையாக அமெரிக்கா போல அசம்பாவிதம் ஏற்படாமல் இளைஞர் உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்படுகிறது.






