கீழடியில் முதுமக்கள் தாழிகள் மனித எலும்புகள்…மரபணு சோதனை நடத்தப்படுமா ?
மிகப்பெரிய வரலாற்று பொக்கிஷம் பொதிந்து கிடக்கின்றன என்று மக்கள் நம்பிக்கையடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழடி ஆராய்ச்சி தொடர்ந்த கொந்தகை கிராமத்தில் கதிரேசனுக்கு சொந்தமான நிலத்தில் ஆறாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.கொந்தகை கிராமத்தில் கதிரைசனக்கு சொந்தமான மற்றொரு நிலத்தில் இன்று காலை விவசாயத்திற்காக விவசாய பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.
அங்கு தென்னங்கன்று காக தோண்டப்பட்ட குழியில் மனித எலும்புக்கூடு உள்ள தாலி பானை தென்பட்டதை கண்ட கதிரேசன் ஆய்வுப்பணி செய்துகொண்டிருந்த தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.அதன்பேரில் தொல்லியல் துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கதிரேசனின் விவசாயம் நடந்த இடத்திற்கு வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர் .அதில் பெரிய தாலிபானை ஒன்றும் சிறிய பானை ஒன்றும் இரண்டு கலையம் மூடுவதற்கான இரண்டு தட்டுகள் சுடுமண்ணால் ஆன தட்டுகள் பெரிய பானைக்குள் மனித எலும்புக்கூடு உட்கார வைத்தது போல் இருந்தது.

ஆராய்ச்சியாளர்கள் பானைக்குள் இருந்த மனிதத் தலை ,கை கால்களுக்கான எலும்புகள் அனைத்தையும் ஆராய்ச்சிக்காக பாதுகாப்பாக எடுத்து வைத்தனர் .இது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்பதை ஆராய்ச்சிக்கு பின் தான் தெரியவரும் என்று கூறினார்கள்.ஏற்கனவே 5 ம் கட்ட ஆய்வு பணியின் போது எலும்புகள் கிடைத்தன. அது மாடுகளின் எழும்புகளாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்க ப்பட்டது.

6 ம் கட்ட ஆய்வின் போது சிறிய அளவில் எலும்பு கிடைத்தது. அது நீண்ட முதுகெலும்பு வரிசைகளை கொண்டதாக இருந்தது. அதுவும் விலங்கின் எலும்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.






