இந்தி திரைப்பட இயக்குனர் பாசு சட்டர்ஜி வயது மூப்பினால் காலமானார் !
பிரபல பாலிவுட் இயக்குனர் பாசு சட்டர்ஜி வயது மூப்பு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 93. ரஜனிகந்தா, சிட்கோர், சோட்டி சி இபாத் போன்ற படங்களை இயக்கிய பாசு சாட்டர்ஜி தமது படங்களில் ஏசுதாசுக்கு பாடும் பாடல் வாய்ப்புகளை வழங்கினார். பிலிட்ஸ் என்ற ஆங்கில வார இதழுக்கு ஓவியங்கள் வரைபவ ராக வாழ்க்கையை தொடங்கிய பாசு சட்டர்ஜி ஏராளமான படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
திரையுலகிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் புகழ் பெற்றிருந்தார். மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் அமிதாப் பச்சன்,அமீர்கான் லதா, மங்கேஷ்கர் உள்ளிட்டோர் பாசு சட்டர்ஜியுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்து உள்ளனர்.
மேலும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பாசு சட்டர்ஜி திரைப்படம் அபாரமானவை ஏற்றமும் மிகவும் நுட்பமான உணர்வுகள் கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






