--- --:--:-- --

மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க கோரிக்கை!

4

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு திரைப்பட தயாரிப்பாளரும் திரையரங்கு உரிமையாளருமான கேஆர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

 

பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என திரையரங்கு உரிமையாளர்கள் நினைப்பது தவறு இல்லை என்று கூறியிருக்கும் அவர் கொரொனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் மாஸ்டர் படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதனை அமல்படுத்துவதும் சாதாரணமான விஷயம் அல்ல என்றும் திரையரங்குக்கு வருபவர்களில் ஒருவருக்கு தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் விரைவில் பரவிவிடும் என்று எச்சரித்துள்ளார்.

 

கட்டுப்பாடுகளுடன் திரையரங்கு திறக்கப்பட்டால் மாஸ்டர் படத்திற்கான வசூல் பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் கே‌ஆர் , தமிழக அரசு திரையரங்குகள் திறக்க அனுமதிக்கும் போது 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

திரையரங்குகளில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்று அரசு நிபந்தனை விதிக்கும் பட்சத்தில் திரையரங்குகள் திறப்பதை தள்ளிப் போடுவதை சாலச் சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon