--- --:--:-- --

நடிகை நிலாவிற்கும் ஜூனியர் என்‌டி‌ஆர் ரசிகர்களுக்கும் மோதல்!

11

என்டிஆர் ரசிகர்களுக்கும், நடிகை நிலாவுக்கும் கடும் மோதல் நடந்துள்ளது. கொலை மிரட்டல் விடுத்தல் ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நிலா. டுவிட்டர் பக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களால் கடும் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.

 

ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் கொதித்து எழுந்தது யென்? தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே. அந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை நிலா. பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினர் நிலா. மீரா சோப்ரா என்ற பெயரிலும் நடித்து வருகிறார்.

 

தற்போது ஊரடங்கு சமயத்தில் மற்ற நடிகைகளைப் போல நிலாவும் அடிக்கடி தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேள்வி கேட்டதற்கு மகேஷ்பாபு என்று பதிலளித்திருந்தார்.

 

ரசிகர் ஜூனியர் என்டிஆர் குறித்து ஏதாவது சொல்லுங்க என்று கேட்டதற்கு அவரைப் பற்றி முழுமையாக தெரியாது என்று கூறியதாக தெரிகிறது. தெலுங்கில் மூன்று படங்களில் நடித்த நிலா முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் பற்றி தெரியாது என்று கூறியது அவரது ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை நிலாவை ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் கடுமையாக டுவிட்டரில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் தொல்லை தாங்க முடியாத நிலா ஜூனியர் என்டிஆர் ஐ டேக் செய்து டிவீட் ஒன்றை செய்துள்ளார். அதில் உங்களை விட மகேஷ்பாபுவை எனக்கு பிடிக்கும் என்று கூறியதால் உங்கள் ரசிகர்களின் அனாகரிகமான இழி சொல்லுக்கு ஆகியுள்ளதாக கூறியுள்ளார்.

 

வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், இப்படி எல்லாம் தான் அழைக்கப்படுவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். இப்படிப்பட்ட ரசிகர்களை பெற்றிருப்பதுதான் வெற்றி என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று ஜூனியர் என்டிஆர் ஐ நோக்கி கேள்வி எழுப்பியுள்ள நிலா தனது பதிவிற்கு பதில் அளிப்பீர்கள் என நினைப்பதாகவும் டுவிட்டரில் கூறியுள்ளார்.

 

மற்றொரு பதிவில் பெண்களுக்கு ஒன்று சொல்வதாகவும் நீங்கள் என்டிஆரின் ரசிகையாக இல்லை என்றால் அவரது ரசிகர்களால் நீங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படலாம் கொலை செய்யப்படலாம் அல்லது உங்கள் பெற்றோர்கள் கொல்லப்படலாம் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிலா தெலுங்கானா போலீசாரிடம் புகார் அளித்தார். தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை அழுத்தம் கொடுத்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon