--- --:--:-- --

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கி வரும் கொரொனா பாதிப்பு!

6

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. இதன் மூலம் உலகளவில் கொரொனா பாதிப்பில் 7 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 706 ஆக உள்ள நிலையில், 97 ஆயிரத்து 581 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இது வரை தொடர்ச்சியாக 95 ஆயிரத்து 526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 598 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 8 ஆயிரத்து 171 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 70 ஆயிரத்து 13 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் இதுவரை 23 ஆயிரத்து 495 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

 

மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லியும், பாதிப்பில் நான்காவது இடத்தில் குஜராத்தும் உள்ளனர். 8 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Right Menu Icon