--- --:--:-- --

டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழப்பு! அதிர்ஷ்ட வசமாக குழந்தை உயிர் தப்பியது!

15

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் காளையார் மங்கலம் சின் உடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த லியோ எடிசன் , கல்லல் ஒன்றியம் வெற்றியூர் விளக்கு அருகிலுள்ள சாத்திர சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெர்சியா ராணி என்பவருக்கும் கடந்த ஒன்றே ஆண்டுகள் திருமணம் நடைபெற்றது.பெர்சியாராணி ஆரம்பத்திலிருந்து காளையார் மங்கலம் செவிலியர் இடம் அட்டை பதிந்து மாதாமாதம் செக்கப் செய்து வந்துள்ளார்.

 

ஒரு மாதத்திற்கு முன்பு காளையார் மங்கலம் மற்றும் பனங்குடி டாக்டர் டாக்டர் இருவரும் பரிந்துரையின் பேரில் காரைக்குடி தனியார் மருத்துவமனையில் ஸ்கேனுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்கள்.அதில் குழந்தை நன்றாக உள்ளது என்றும் ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கி பார்த்துவிட்டு காளையார் மங்கலம் டாக்டர்,பனங்குடி டாக்டர், ஆகிய இருவரும் குழந்தை நன்றாக உள்ளது என்றும் நார்மல் டெலிவரி ஆகிவிடும் என்றும் சொல்லியுள்ளனர்.

பெர்சியா ராணிக்கு இடுப்பு வலி அதிகமாகி பனங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மொத்தம் நான்கு பேர் இருந்தார்கள் அவர்கள் உடனே டாக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இடுப்பு வலி அதிகமாகும் மறுபடியும் டாக்டருக்கு தகவல் கூறியுள்ளனர்.வருகிறேன் என்று கூறிவிட்டு டாக்டர்கள் வராததால் நர்சுகள் சேர்ந்து பிரசவம் பார்த்து இரவு 12 .34 பெண் குழந்தை பிறந்துள்ளது .அதற்குப் பிறகு தாய் மயக்க நிலைக்குச் சென்று உள்ளார் .

 

நஞ்சுக்கொடி வரவில்லை என்றும் ஏதோ ஒரு கட்டி போல் தெரிகிறது என்று மறுபடியும் டாக்டருக்கு போன் செய்து உள்ளார்கள் . அதோடு நர்சுகள் என்ன செய்வது என்று தெரியாமல் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார்கள் ஆனால் டாக்டர் மிகவும் தாமதமாக 1. 35க்கு வந்துள்ளார் வந்து 20 நிமிடம் கழித்து சிவகங்கைக்கு அனுப்பியுள்ளார். சிவகங்கை சென்ற 10 நிமிடத்தில் இறந்து விட்டதாக சிவகங்கை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இறந்த பெல்சியாராணியின் சகோதரர் ஆல்பர்ட் கூறியதாவது, டாக்டர்கள் நர்சுகள் அறிவுரைப்படி நடந்து கொண்டோம் ஸ்கேன் ரிப்போர்ட் நன்றாக உள்ளது என்றும் நார்மல்டெலிவரி ஆகிவிடும் என்று கூறினார்கள் அதனால் பனங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தோம் டாக்டர் மற்றும் நர்ஸ் பூங்கோதை இருவரும் மீது தகுந்த விசாரணை செய்து இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் SHN நாகேஸ்வரி என்பவர் குழந்தையை தாங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார் எனவே அவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணிர்மல்க தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon