--- --:--:-- --

குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க முடிவு!

2

குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நிதின் கட்கரி, நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

 

அப்போது பேசிய பிரகாஷ் ஜவடேகர் சிறு, குறு தொழில் துறைக்கான அடிப்படை அம்சம் மாற்றி அமைக்கப் போவதாக கூறினார். சிறு, குறு தொழில் துறையில் மத்திய அரசு வழங்கும் சலுகைகள் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் 7 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

 

அவர்களுக்கு 10,000 ரூபாய் கடனுதவி வழங்கும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டதாக பிரகாஷ் ஜவடேகர் கூறினார். 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்புக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தரப்பட்டது. 3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 

சிறு குறு நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நிவாரண சலுகைகள் அளிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon