‘ PM CARES ’ அரசு அமைப்பு இல்லை! பிரதமர் அலுவலகம் கூறிய தகவல்!
கொரொனா தடுப்பு பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் திட்டம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்ப முடியாது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது .
பிஎம் கேர்ஸ் நிறுவனத்தில் இதுவரை எவ்வளவு தொகை பெறப்பட்டுள்ளது என்பது குறித்து அவை குப்தா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார். இந்த பிஎம் கேர்ஸ் நிவாரண நிதியிலிருந்து செலவிடப்பட்ட தொகை குறித்த தகவலையும் அவர் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்திருக்கும் பிரதமரின் அலுவலகம் பிஎம் கேர்ஸ் பண்ட் அரசமைப்பு இல்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அதன் தரவுகளை பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பிஎம் கேர்ஸ் ஃபண்ட் குறித்த தகவல்களை அதற்கான பிரத்யேக இணைய தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.






