--- --:--:-- --

திருவாடானை அருகே கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது!

20

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டியில் இருந்து திருவாடானை செல்லும் சாலைக்கிடையில் நரிக்குடி கிராமத்திற்கு பிரிவு சாலை அருகே இரண்டுசக்கர வாகனத்தில் வைத்து மூன்று நபர்கள் கஞ்சா விற்பதாக தொண்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

 

அதன்பேரில் நிலைய அலுவலர் எழிலரசி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று பார்த்தபோது திருவாடானை தாலுகா குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து மகன் சூர்யா (23), தேவகோட்டை தாலுகா கன்னிகுடி கிராமத்தைச் சேர்ந்த சோனைமுத்து மகன் சந்தோஷ்குமார்(22) மற்றும் தேவகோட்டை தாலுகா சீ.உரணி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி மகன் அருண்குமார்(23) ஆகியோர்களை கைது செய்யப்பட்டு இவர்கடமிருந்து ஆயிரத்து 300 கிராம் கஞ்சாவை கைப்பற்றி 2 இரண்டு சக்கரவாகனங்களை கைப்பற்றி கைது செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon