--- --:--:-- --

விமான கட்டணங்கள் 40% முதல் 60% வரை அதிகரித்துள்ளது !

7

கோவையில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் விமான டிக்கெட்டுகள் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொது முடக்கத்தால் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியிருந்த விமான சேவை கடந்த 25ஆம் தேதி முதல் தொடங்கியது.

 

இந்நிலையில் விமான கட்டணங்கள் 40 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. கோவையில் இருந்து மும்பை சென்று வர 9 ஆயிரம் ரூபாயாக இருந்த டிக்கெட் விலை தற்போது 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும், இரண்டு பேர் டெல்லிக்கு செல்ல 7 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இருந்த டிக்கெட் விலை தற்போது 17 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து இருப்பதாகவும் தெரிகிறது.

 

குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களே இயக்கப்படுவதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாலும் விமான டிக்கெட்டுகளை அதிகரித்திருப்பதாக விமான டிக்கட் புக்கிங் ஏஜென்சி நிறுவனத்தினர் கூறுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon