--- --:--:-- --

பொதுமுடக்கம் நீட்டிப்பா? முக்கிய முடிவு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

6

பொது முடக்கத்தை நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கொரொனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்ட பொது முடக்கம் நாளை மறுதினம் நிறைவடைகிறது.

 

இந்தநிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. ஏற்கனவே அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி பெற்ற தகவல்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் அமித்ஷா கூறியுள்ளார்.

 

முக்கியமாக தேர்வு நடத்துவதற்காக பள்ளிகள் திறப்பது, நகர போக்குவரத்து தொடங்குவது, வழிபாட்டு தளங்களை திறப்பது மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து ஆகிய கோரிக்கைகளை பிரதமரிடம் அவர் தெரிவித்துள்ளார். வரும் 1ம் தேதி முதல் மேற்கொள்ள வேண்டியவை பொது முடக்கத்தை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நாளை மறுதினம் மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாற்றும் பிரதமர் இது பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon