சிவகங்கை மாவட்டத்தில் யாசகம் பெற்ற ரூபாய் 5 ஆயிரத்தை கொரோனா நிதியாக வழங்கிய (பிச்சைக்காரர்) யாசகர்…!
சிவகங்கை மாவட்டம் அழகிச்சிப்பட்டியை சேர்ந்த 87 வயதான முத்துக்கருப்பன் என்கிற யாசகர் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், அனைவரும் கை விட்டதால் ஆதரவின்றி பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் மூலம் நாள்தோறும் மூன்று வேளை வழங்கப்படும் உணவினை வாங்கி பசியாறினர். சிவகங்கை சிவன் கோவிலில் தங்கியபடி பல்வேறு இடங்களில் யாசகம் பெற்ற ரூ 5 ஆயிரத்தை முதலமைச்சரின் நிவாரண நிதியாக இன்று வட்டாட்சியர் மயிலாவதியிடம் வழங்கினார்.

யாசகன் முத்துக்கருப்பன் நம்மிடையே கூறும்போது ஆசையாக வளர்த்த மகன் தற்போது மதுவுக்கு அடிமையாகி வறுமையில் வாடுவதாகவும், எனவே மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என என வேண்டுகோள் விடுத்தார்.
பிச்சையெடுத்த பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய முத்துக்கருப்பனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.






