தனது எஜமானரை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு கடித்து கொன்ற நாய்!
மதுரையில் தன் எஜமானரை பாம்பிடம் இருந்து காப்பாற்றும் விதமாக அதனை கடித்துக் கொன்று தன் விசுவாசத்தை காட்டியிருக்கிறது செல்லப் பிராணியான நாய் ஒன்று. மதுரையில் கூடல் நகர் பகுதியில் சிரியால் என்பவர் தனது வீட்டில் டாபர்மேன் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இவருடைய வீட்டு வராண்டாவில் 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று திடீரென நுழைந்துள்ளது. இதனை பார்த்த அந்த நாயும் விடாமல் குரைத்து அதனைத் தடுத்துள்ளது. பின்னர் பாம்புடன் கடுமையாக சண்டை போட்டு அந்த நாய் பாம்பை கடித்து கொன்றது.
நாயின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த அவர் பாம்பு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் பாம்புகடி உடலில் காயங்கள் ஏற்பட்டதால் அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசுவாசத்திற்கு பெயர் பெற்றதாக கூறப்படும் நாய் தனது எஜமானருக்கு ஆக தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






