--- --:--:-- --

மதுரையில் பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர்!

16

மதுரையில் இளம்பெண் ஒருவருக்கு வேலை தருவதாக பாலியல் தொல்லை கொடுத்த தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.வறுமையால் பணிக்கு வந்த பெண்ணை மிரட்டி நிர்வாண படம் எடுத்து மிரட்டிய டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பரிவாளன் இளம்பெண் சிக்கியது எப்படி?

 

மதுரை ஊமச்சிகுளம் அன்னைவேளாங்கண்ணி சேர்ந்தவர் 28 வயதான கணேஷ் ஆனந்த் மதுரை ஐயர் பங்களா பகுதியில் ஸ்பைடர் என்ற பெயரில் தனியார் துப்புரவு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு நிர்வாகப் பணிக்கு ஆள் தேவை என்று தனியார் நிறுவனம் மூலம் மூன்று வாரத்திற்கு முன் இணையத்தில் விளம்பரப்படுத்தி உள்ளார்.

 

ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை செல்லூரை சேர்ந்த லோடுமேன் ஒருவரை 5 ஆண்டுகளுக்கு முன் முகநூல் மூலமாக காதலித்து திருமணம் செய்து மதுரை இடையே வசித்து வருகிறார். கணவர் கூலி வேலைக்கு செல்ல போதிய வருமானமின்மையால் மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

 

அப்போது இணைய தளத்தில் இந்த துப்பறியும் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்துள்ளார். நேர்முகத்தேர்வில் அவரை கணேஷ் ஆனந்த் தேர்வு செய்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த மே 23-ஆம் தேதி ஐயர் பங்களாவில் உள்ள துப்பறிவு நிறுவனத்திற்கு அந்தப் பெண் பணிக்குச் சென்று உள்ளார்.

 

நள்ளிரவு 12.30 மணி அளவில் அலுவலக கதவுகளை அடைத்த துப்பறிவாளர் கணேஷ் ஆனந்த் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் அங்கிருந்த கட்டையால் அவரை தாக்கி ஆடைகளை களைய சொல்லியுள்ளார்.

 

அந்தப் பெண் மறுக்க அவரை தாக்கி கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக அந்தப் பெண்ணை வீடியோ எடுத்த அவர் தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் நிர்வாண வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அதை வெளியில் கூறினால் அந்த பெண்ணின் காதல் கணவரை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

 

அங்கிருந்து தப்பி அந்தப் பெண் நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த பெண்ணின் கணவர் தனது நண்பர்களுடன் கணேசனை தாக்கியுள்ளார். தாக்குதல் தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர். தனக்கு அச்சுறுத்தல் வரலாம் என்று பயந்து அந்த பெண் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து புகார் செய்தார்.

 

இதைத்தொடர்ந்து ஸ்பைடர் நிறுவனத்திற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் அளித்த புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்த போலீசார் கைது செய்தனர். அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்துவரும் போலீசார் இதற்கு முன் அங்கு பணிபுரிந்த பெண்களிடம் துப்பறிவு என்ற பெயரில் பெண்களை மிரட்டி உள்ளாரா என விசாரணை செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon