--- --:--:-- --

நீட் இட ஒதுக்கீட்டில் மாணவர்களின் இடங்களை தடுத்தது மத்திய அரசு

1

நீட் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அது மருத்துவப் படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்து உள்ளதாக அவர் சாடியுள்ளார் .

 

கடந்த 3 ஆண்டுகளில் 11 ஆயிரம் இடங்களை அவர்கள் இழந்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பாதுகாக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon