--- --:--:-- --

வட மாநிலங்களில் தொடங்கியுள்ள வெட்டுக்கிளி தாக்குதல்!

9

உத்திரப்பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு வெட்டி கிளி தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் நெல் மற்றும் கோதுமை பயிர்களின் அறுவடைகள் நடந்து வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கிய வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஹரியானா, குஜராத், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

 

வெட்டுகிளிகள் கூட்டம் கூட்டமாக பறந்து விளைநிலங்களில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனை சமாளிக்க முடியாமல் விவசாயிகளும், வேளாண் துறையினரும் திணறி வருகின்றனர். உத்திரபிரதேசத்தில் ஜான்சி பகுதிக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் விளைநிலங்களில் தாக்குதலை நடத்தி வருகின்றன.

 

ஜான்சி, லலித்பூர், ஜலான் மற்றும் அவுரியா, ஹமீர்பூர், கன்னாஜ், எட்டாவா, கான்பூர் ஆகிய பகுதிகளிலும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று உத்தரபிரதேச மாநில வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க ரசாயன வாகனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon