--- --:--:-- --

கருப்பின இளைஞரை அடித்து கொன்ற காவலர்கள் கைது!

12

அமெரிக்காவில் கருப்பின இளைஞரை அடித்துக் கொன்ற காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். மின்னசூட்டா மாகாணத்தில் உள்ள மின்னபோலிஸ் என்ற இடத்தில் வழக்கு ஒன்றில் சிக்கி தப்பிக்க முயன்ற கருப்பின இளைஞரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

 

அப்போது அவர் கழுத்தின் பின் பக்கமாக காவலர் ஒருவர் முழங்காலிட்டு அழுத்தினார். இதனால் தன்னால் மூச்சு விட முடியவில்லை என அந்த கருப்பின இளைஞர் கதறி துடித்தார். அப்போது சாலையில் இருந்த சிலர் இதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

 

அதனை கண்ட மற்றொரு காவல் அதிகாரி பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பின இளைஞர் உயிரிழந்ததை அடுத்து அவரை கைது செய்த இரு காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon