--- --:--:-- --

குளம் ஏலம் எடுப்பதில் நடந்த தகராறில் கழுத்தில் மிதித்து ஒருவர் கொலை!

11.1

சீர்காழி அருகே ஊர் குளங்களை ஏலத்தில் எடுப்பதில் ஏற்பட்ட சண்டையில் கழுத்திலேயே ஒருவர் மிதித்து கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. ஐந்துபேர் சிக்கியது எப்படி? உள்ளூரில் குளம் ஏலம் விட்ட பிறகு ஏற்பட்ட தகராறில் சரவணன் கொலை செய்யப்பட்டுள்ளார். மது போதையில் நடந்த வாக்குவாதம் கொலையில் முடிந்தது எப்படி?

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ளது ஊதியம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மூன்று குளங்களிலும் மீன்பிடிப்பது தொடர்பாக ஆண்டுதோறும் ஏலம் விடுவது வழக்கம் .அதன்படி புதன்கிழமையன்று மாலை அங்கு உள்ள பெருமாள் கோவிலில் கிராம கூட்டம் நடைபெற்றது. அதே ஊரை சேர்ந்த 45 வயதான சரவணன் ஒரு குளத்தை ஏலம் எடுத்தார்.

 

மீதி இரண்டு குளங்களை வேறு நபர்கள் ஏலத்தில் எடுத்த நேரம் முடிந்த பின் பரமசிவம் என்பவர் போதையில் வந்த சண்டையில் ஈடுபட்டார். அவரை இளங்கோவன் என்பவர் தாக்கியுள்ளார். அடிதடி தகராறு விளக்குவதற்காக சரவணனின் சகோதரர் குமரகுரு நடுவில் புகுந்துள்ளார். அவரையும் இளங்கோவன் அடித்துள்ளார்.

தகவலறிந்து வந்த சரவணன் இளங்கோவனிடம் தனது அண்ணனை அடித்தது ஏன் என தட்டி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த இளங்கோவன் சுரேஷ் உள்ளிட்ட சிலர் சரவணனை கீழே தள்ளி அவரது கழுத்தில் பலமாக மிதித்து தாக்கியுள்ளனர். அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் விலக்கிவிட்டு சரவணனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் இளங்கோவன் சுரேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உறங்கும்போது அனுமதியின்றி ஊர்க் கூட்டம் கூடியது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

குளம் ஏலம் எடுப்பது தொடர்பாக நடந்த வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon