--- --:--:-- --

பெருமளவில் கூட்டம் ! ஆடம்பரமாக பிறந்த நாள் கொண்டாடிய எம்‌எல்‌ஏ!

10

தெலுங்கானாவில் பெரும் அளவு கூட்டம் சேர்த்து பிறந்தநாள் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் கோபால் ரெட்டியிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த நாராயண தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோபால் ரெட்டி இந்த மாத தொடக்கத்தில் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடினார்.

 

நண்பர்கள், உறவினர்கள், ஊர்மக்கள் , கட்சிகாரர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காதது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க சட்டமன்ற உறுப்பினர் கோபால் ரெட்டி உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon