தனக்கு கொரொனா அறிகுறி உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் ! உதவிய பழனிசாமி!
கொரொனா பரிசோதனை செய்துகொள்ள உதவுமாறு ட்விட்டரில் வந்த வேண்டுகோளை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் . பாலா என்பவர் முதல்வருக்கு அனுப்பிய ட்விட்டர் தகவலில் தனக்கு கொரொனா அறிகுறி இருப்பதாகவும் கொரொனா வைரஸ் தொற்று இருக்கிறதா என பரிசோதிக்க உதவுமாறும் பதிவிட்டுள்ளார்.
அதை இணைத்து வெளியிட்டுள்ள பதிவில் கவலை வேண்டாம் தம்பி என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரை உடனடியாக பரிசோதிக்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் துணைச் செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரை முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து கடலூரை சேர்ந்த அந்த நபருக்கு உடனடியாக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் முதலமைச்சருக்கு பதிலளித்துள்ளார்.






