பச்சைக் கருவுடன் கோழி முட்டை! ஆச்சர்யம்! வைரலாகும் புகைப்படம்!
கேரளாவில் பச்சை கருவுடன் கூடிய முட்டையிடும் கோழிகள் குறித்து அம்மாநில விஞ்ஞானிகள் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். மலப்புரம் என்ற இடத்தில் ஷிகாபுதின் என்பவரது சிறிய கோழி பண்ணையில் 6 கோழிகள் மட்டும் பச்சை கருவுடன் கூடிய முட்டைகள் இட்டு வருகின்றனர்.
பச்சை கருமுட்டையில் இருந்து பொரித்த கோழி குஞ்சுகள் வளர்ந்து பச்சை கரு முட்டைகள் இட்டு வருகின்றனர். இது குறித்து சமூக வலைதளங்களில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. குஞ்சு பொரிப்பதற்காக பச்சை கருமுட்டைகளை பயன்படுத்தி வருவதாக கூறும் சகாபுதீன் குடும்பத்தினர் தாங்கள் இந்த முட்டைகளை சாப்பிட்டு பார்த்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த அதிசய நிகழ்வு குறித்து தகவலறிந்த கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுக்கு பின்னரே பொதுமக்களுக்கு பச்சை கருமுட்டை விற்பனைக்கு கிடைக்கும்.






