ஆம்பன் சென்ற பிறகு வானில் தோன்றிய அதிசயம்!
அம்பன் புயலின் அசுரத்தனமான காற்று கரையேறி சென்றபின் புவனேஸ்வர் நகரவாசிகள் வானில் அதிசயத்தைக் கண்டனர். புயல் கடந்த பிறகு அந்த நகரின் வானம் இளம் சிவப்பும், ஊதாவும் இணைந்து புதியதொரு காட்சியை அங்குள்ள மக்களின் கண்களுக்கு விருந்தாகியது. சில மணித்துளிககள் வீதியில் உள்ள அனைவரும் வானை நோக்கி அந்த மக்கள் பார்த்தனர்.
பின்னர் இயற்கையின் அந்த அரிய காட்சியால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த காட்சியை டிவிட்டரில் நிறைந்து நெட்டிசன்களுக்கு கொண்டாட்டமாக மாறியது. எல்லாவற்றையும் மனிதகுலம் வெல்லும் என பொருள்படும் வாசகங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.






