--- --:--:-- --

ரயில் நிலைய கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!

3

ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் இன்று முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. பொது முடக்கத்தால் நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

ரயில்களில் பயணிக்க தற்போது வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ரயில் நிலையங்களில் இன்று முதல் டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவுக்காக திறக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

முன்பதிவு காக வருவோர் டிக்கெட் கவுண்டரில் முன் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய முன்பதிவு மையங்களில் குறைந்தபட்சம் இரண்டு கவுண்டர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon